புள்ளி லைன் ஊராட்சி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்

புழல், ஜூன் 23: செங்குன்றம் அருகே புள்ளி லைன் ஊராட்சியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். புழல் ஒன்றியம் புள்ளி லைன் ஊராட்சி திமுக சார்பில் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டமும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக மாவட்ட பிரதிநிதி மு.ரமேஷ், புள்ளி லைன் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், திமுக கிளை நிர்வாகிகள் டில்லி பாபு, சதீஷ், ராமச்சந்திரன், ஜனார்த்தனன், அற்புதராஜ், பாயாசம்பாக்கம் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

கூட்டத்தில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் ப.தாயகம் கவி, திமுக தலைமை பேச்சாளர் தக்கோலம் தேவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகள் மற்றும் கலைஞரின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர். முன்னாள் புழல் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன், செங்குன்றம் திராவிட மணி, இலக்கியன், ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் குப்பாமணிதோப்பு திமுக கிளை செயலாளர் தினேஷ் நன்றி கூறினார். இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post புள்ளி லைன் ஊராட்சி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: