கேரளா: கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். கேரளாவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.