வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு

 

வேதாரண்யம், மே 29: வேதாரண்யம் அடுத்த மேலமறைக்காடர் ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வாராஹி அம்மனுக்கு பால் பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

The post வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: