தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: இடம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது பயங்கர தாக்குதல்

தெற்கு காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹமாஸ் படைகளை எதிர்த்து காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் படைகளும் அவ்வப்போது பதிலடி அளித்து வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேலின் வர்த்தக மையத்தின் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக நேற்று ஹமாஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் போரினால் இடம் பெயர்ந்த 1000 கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள அல்சுல்தான் முகாம் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.

The post தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: இடம்பெயர்ந்த மக்கள் வசித்த முகாம் மீது பயங்கர தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: