உலக கோப்பையில் விளையாட இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர்

மும்பை: ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றனர். ஐபிஎல் தொடர் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 2ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் முலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றனர். மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். ஜூன் 27ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளன.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா அணிகளின் சவாலை சந்திக்கிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் (ஜூன் 5, நியூயார்க்) அயர்லாந்து அணியுடன் மோதுகிறது. அதற்கு முன்பாக இந்தியா – வங்கதேசம் மோதும் பயிற்சி ஆட்டம் நியூயார்க்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

 

The post உலக கோப்பையில் விளையாட இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: