பொன்னேரி அரசு கல்லூரி அருகே ஜம்பு சர்க்கஸ் தொடக்கம்

 

பொன்னேரி, மே 25: பொன்னேரி அரசு கல்லூரி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் நகர மன்ற தலைவர் ஜம்பு சர்க்கசை தொடங்கி வைத்தார். கடந்த 1977ம் ஆண்டு தொடங்கபட்ட ஜம்போ சர்க்கஸ் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னேரியில் முதல் முறையாக, அரசு கல்லூரி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற ஜம்போ சர்க்கஸ் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் ஆப்பிரிக்கா எத்தியோப்பியா நாட்டு கலைஞர்கள், சாகசம் செய்தனர். இந்த சர்க்கஸில் ஆண்டனிஸ் குழுவினர் மற்றும் முகேஷ், தான்யா வழங்கும் இரு பக்க அக்ரே பேட்டிக்ஸ் ரோலர் பேலன்ஸ், ராடர் பேலன்ஸ் யுனி சைக்கிள்ஸ்ட், ஸ்டிக் பேலன்ஸ், கண் ஸ்ப்ரிங் நெட், செங்குத்தாக ஊஞ்சலாடும், அக்ரோபட், ரஷ்யன் ரோப் பேலன்ஸ், குதிரை சவாரி, மயில் நடனம், பிளேயிங் ட்ராபிஸ்,

குளோப் டெத்,கோமாளிகளின் கேளிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு புது புது சாகசங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.  தொடக்கவிழா நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றிவேல் ராமலிங்கம், சர்க்கஸ் ஒருங்கிணைப்பாளர் ஷாஜிலால், நகராட்சி கவுன்சிலர்கள், நல்லசிவம், உமாபதி, பத்மா, மணிமேகலை, கவிதா, அருணா, சமூக ஆர்வலர்கள் பாலச்சந்தர், விக்னேஷ் உதயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொன்னேரி அரசு கல்லூரி அருகே ஜம்பு சர்க்கஸ் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: