சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

தேனி, மே 24: தேனி மாவட்ட நீதிபதி அறிவொளி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர்கள் பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களுடைய பெயர், முகவரி, கல்வித் தகுதி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விரிவான விபரங்கள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் அடங்கிய விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து வருகிற 27ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,

மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 27ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களை https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் சென்ற தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தெரிவித்துள்ளார்.

The post சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: