குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பால்குட, காவடி திருவிழா

குத்தாலம், மே 23: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காந்திநகரில்  கற்பக விநாயகர்,  பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் 11ம் ஆண்டு பால்குட, காவடி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் காவேரி தீர்த்த படித்துறையில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் காவடிகள், அலகு காவடிகள், பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கை, மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தி கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கற்பக விநாயகர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் சுமார் 2,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பால்குட, காவடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: