மின் தடையை சீரமைக்க கோரிக்கை

 

ராமேஸ்வரம், மே 22: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.  ராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடிக்கடி மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்தடையால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினசரி மின்வெட்டு பிரச்னையை உடனே சரி செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழுவின் சார்பில் நேற்று ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் முருகானந்தம், காரல் மார்க்கஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மின் தடையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: