சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம்: கள்ள மவுனம்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை அமைச்சர் துரைமுருகன் பதிலடி

சென்னை: காவிரி விவகாரத்தில் தீர்ப்பினை மீறி கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட்டால் உறுதியாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் முயற்சி எனவும் இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கள்ள மவுனம்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை என சாடியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய காவிரி நீர் உரிமையை சட்ட ரீதியாகவும் தமிழ்நாட்டின் உரிமை என்ற அடிப்படையிலும் நிச்சயமாக பெறுவோம் என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள துரைமுருகன் தொடர்ந்து மாநில அரசு வலியுறுத்தும் எனவும் கூறியுள்ளார். கேரளா, கர்நாடகா காவிரி மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கண்காணிக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் எப்பொழுதும் போல தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் காவிரி நேர் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு செய்து வருகிறது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம்: கள்ள மவுனம்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை அமைச்சர் துரைமுருகன் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: