வத்திராயிருப்பு அருகே பாப்பநத்தம் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளம்

வத்திராயிருப்பு, மே 20: வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பாப்பநத்தம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அத்திகோவில், பாப்பநத்தம் கோயில் மற்றும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வத்திராயிருப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சிறு சிறு அருவிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாப்பநத்தம் கோவில் மலைப்பகுதியில் நேற்று மதியம் திடீரென பெய்த மழையின் காரணமாக ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து என்பது அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்திராயிருப்பு அருகே பாப்பநத்தம் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: