திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

தர்மபுரி, மே 20: தர்மபுரி சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட துணை செயலாளருமான வக்கீல் மணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். கூட்டத்தில், சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் தங்கமணி, துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பெரியண்ணன், வக்கீல் அசோக்குமார், கவுதம், துரைசாமி, உதயசூரியன், தண்டபாணி, துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 4ம் தேதி முன்னதாகவே முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடித்து முகவர்களுக்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: