தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபானம் பதுக்கி வைத்து விற்ற 16 பேர் கைது

தஞ்சாவூர், மே 19:தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மதுவிலக்கு போலீசார் அவர்களின் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மதுவிலக்கு போலீசார், ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, தென்னங்குடி பகுதிகளிலும், கும்பகோணம் மதுவிலக்கு போலீசார் பந்தநல்லூர், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளிலும், பட்டுக்கோடடை மதுவிலக்கு பிரிவு போலீசார் பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, அத்திவெட்டி, ஊரணிபுரம் பகுதிகளிலும் இந்த அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது வீடுகளிலும், வீட்டின் அருகேயும், பெட்டிக்கடையிலும், முக்கிய சந்திப்பு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி மது விறப்னை செய்ததாக சேகர் (வயது 58), ஜெயக்குமார் (40), பாப்பு (75), நீதிபதி (48), கோவிந்தசாமி (52, பானு (61), பூவலிங்கம் (62), சுதாகர் (41), காசிராமன் (57), சாமிக்கண்ணு (80), அருண்குமார் (27), கதிர்வேல் (23), பாஸ்கர் (43), காளிமுத்து (53), பாரதிதாசன் (58), மோகன் (39) ஆகிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபானம் பதுக்கி வைத்து விற்ற 16 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: