ஜெயங்கொண்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயங்கொண்டம், மே19: இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் மே.18ம் தேதி ேநற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தமிழர் நீதி கட்சி அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா.இளவரசன் தலைமை தாங்கி பிரபாகரன் மற்றும் புலவர் கலியபெருமாள் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் .

The post ஜெயங்கொண்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: