கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம்

கந்தர்வகோட்டை, மே 19: ஆதனக்கோட்டையில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின்கீழ் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகஇசைவு பெற்ற புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஜெமிலா ரோஸ்லின், கமலி பிரியா, கனிஷ்கா ஈஸ்வரி, கீர்த்தனா, லாவண்யா, மானசா, மஞ்சுளா மற்றும் எஸ். லாவண்யா, எஸ். மனசா, ஆகியோர் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தில் கீழ் ஆதனக்கோட்டை கிராமத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் ஒரு பகுதியாக அரசு கால்நடை மருத்துவர் கமலாதேவி தலைமையில் கால்நடைகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் முகாமிற்கு கால்நடைகளை கொண்டு வந்து பயன் அடைந்தனர். இதில் கால்நடைகளுக்கு தாது உப்பு, குடற்புழு நீக்குதல், சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவர் கமலாதேவி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றி எடுத்துக் கூறினார்.

The post கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: