செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்

 

துறையூர், மே 18: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாரம், செங்காட்டுபட்டியில் கண்ணனூர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களுடைய வயலிற்கு சென்று செய்முறை விளக்கங்களை செய்து காட்டினர்.

இதன் கீழ் பிரகாஷ் வயலில், வாழை சாகுபடியில் அதிக பாதிப்பு தரும் பனாமா வாடல் நோய், நூற்புழு மற்றும் வேர்த்தண்டு அந்துபூச்சி போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் வாழைக்கன்று நேர்த்தி(பாரிங் அன்ட் பிரலினஜ்), வாழைத்தண்டு ஊசி (கார்ம் இன்ஜெக்சன்) போன்ற மேலாண்மை முறைகளை செய்து காட்டி விளக்கம் அளித்தனர்.

அடுத்ததாக வெங்கடேசன் வயலில் தென்னை மரத்தில் விளைச்சலை அதிகரிக்கவும், தேங்காய் அளவை பெரிதுபடுத்தவும் வேர் ஊட்டம் (ரூட் பீடிங்) எனும் நுட்பத்தை செய்முறையாக அவரது வயலில் மாணவர்கள் செய்து காட்டினர். கோடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்படுகிறது. கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்பட்டு மண்ணிலுள்ள ஊட்ட சத்துக்கள் விரையமாகும், கோடை உழவு செய்வதால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கபடுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுபடுகிறது.

The post செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: