கோவை அரசு பள்ளிகளில் கல்வித்துறை செயலர் ஆய்வு: மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுறுத்தல்

 

கோவை, மே 18:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் குமரகுருபரன். இவர், கோவை அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி பள்ளி, கெம்மநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் இருந்தனர். இந்நிலையில், முதன்மை செயலர் குமரகுருபரன் அரசூர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹைடெக் லேப் மற்றும் கணினி ஆய்வகம், கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளியின் ரிசல்ட், மாணவர் சேர்க்கை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், அரசூர் பள்ளியில் 10ம் வகுப்பில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து அரசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்து, டிஜிட்டல் போர்டு வைக்கும் இடம் குறித்து கேட்டறிந்தார். மேலும், காட்டம்பட்டி பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

அன்னூர் அரசு பள்ளியிலும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, பள்ளிகளின் ரிசல்ட், உட்கட்டமைப்பு வசதி, டாய்லெட், அட்மிஷன் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

The post கோவை அரசு பள்ளிகளில் கல்வித்துறை செயலர் ஆய்வு: மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: