மானூர் அருகே பைக்கில் சென்றவரை தாக்கியவர் கைது

மானூர், மே 18: ஆலங்குளம் தாலுகா கல்லத்திக்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேந்தரன் (31). இவர் மானூர் அருகே மதவக்குறிச்சி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த மதவக்குறிச்சியைச் சேர்ந்த செல்லப்பா மகன் உமேஸ்(33) என்பவர் அதிகமாக ஹாரன் அடித்துள்ளார். இதை சுரேந்திரன் கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த உமேஸ், சுரேந்தரனை தாக்கியுள்ளார். இதுகுறித்து சுரேந்தரன் மானூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து உமேசை கைது செய்தார்.

The post மானூர் அருகே பைக்கில் சென்றவரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: