நாகர்கோவிலில் பொழுது போக்கு அம்சங்களுடன் பொருட்காட்சி ஆர்வமுடன் பொதுமக்கள் வருகை

நாகர்கோவில், மே 18: நாகர்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாஞ்சில் பொருட்காட்சியானது இவ்வருடமும் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானத்தில் கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கியது. இங்கு புர்ஜ் கலிபா, ஈபிள் டவர் போன்ற உலக அதிசயங்களை அச்சு அசலாக வடிவமைத்திருக்கிறார்கள். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இவை பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. இவற்றின் மீது ஏறிநின்று மக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மேலும் எண்ணற்ற வனவிலங்குகளை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த பொருட்காட்சிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பேன்சி ெபாருட்கள், விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர்கள், துணி வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தின்பண்ட கடைகளும் உள்ளன. முக்கியமாக டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய், மசால்பூரி, ஸ்பிரிங் பொட்டடோ, ஜிகர்தண்டா, குலுக்கி சர்பத், ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுகளின் விற்பனையும் நடக்கிறது. இதனை தவிர பொழுதுபோக்கு விளையாட்டுகளான ராட்டினம், ஜயண்ட்வீல், பிரேக் டான்ஸ், படகு சவாரி மற்றும் சிறுவர் ரயில் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. இந்த பொருட்காட்சியானது தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.

The post நாகர்கோவிலில் பொழுது போக்கு அம்சங்களுடன் பொருட்காட்சி ஆர்வமுடன் பொதுமக்கள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: