உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்கா அசோசியேஷன் நன்றி

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் தலைவர் கலீபா சாஹிப் அளித்த பேட்டி: சென்னை அரசு தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரியில் நடந்தது. தமிழக அரசு தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும். பள்ளிவாசல் கட்டுமான பணியில் தற்போது உள்ள நடைமுறையில் உள்ள சிக்கல்களை சரி செய்து எளிமையாக்க வேண்டும். உலமா ஓய்வூதியத்தை உயர்த்தித் தரவண்டும் என்று அந்த கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானும் எடுத்து சென்றார். இதை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மானியம் உயர்த்தி அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி எளிமையாக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டார். சிறுபான்மையினர் நலன் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சிறுபான்மை மக்களின் மனதை அறிந்து செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சார்பில் நன்றி, பாராட்டை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.

 

The post உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்கா அசோசியேஷன் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: