கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம்

விருதுநகர், மே 17: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வாழ்வாதார புத்தாக்க திட்ட பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார புத்தாக்கத் திட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதம் 20 நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற ஒப்பந்தத்தில் வேலைக்கு சேர்ந்த நபர்களை 30 நாட்கள் வேலை வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 2022ல் பணியில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு 2023 செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. எனவே மாத ஊதியத்தை தவறாமல் வழங்கவும், நிலுவைத் தொகையை விரைவாக வழங்கிடவும் கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து களைந்து சென்றனர்.

The post கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: