தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை

கோவில்பட்டி, மே 16: தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் கே.எஸ்.விஜயபிரபாகரன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். சிவகாசி டி.கே.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தனித்திறன் போட்டியில் கோவில்பட்டி இ.எம்.இ. ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர் கே.எஸ்.விஜயபிரபாகரன் (9) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர் கே.எஸ்.விஜயபிரபாகரன், பயிற்சி அளித்த ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் கார்த்திக் அஜய் மற்றும் பயிற்சியாளர்களை மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: