காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12,196 மாணவர்கள் தேர்ச்சி: 33வது இடத்தை பிடித்தது

காஞ்சிபுரம், மே 15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12,196 மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 33வது இடத்தைப் பிடித் துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்பு கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம்தேதி முதல் துவங்கி மார்ச் 26ம்தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை விதித்த கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்று முடிந்
தது. தொடர்ந்து, தேர்வில் மாணவ – மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவு பெற்று, நேற்று காலை 9.30 மணியளவில் இணையதளத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 46, தனியார் பள்ளிகள் 44, அரசு உதவிபெறும் பள்ளிகள் 11, நகராட்சி பள்ளிகள் 3, ஆதிதிராவிட நல பள்ளிகள் 2, மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி 1 என மொத்தம் 106 பள்ளிகளை சேர்ந்த 6,676 மாணவர்கள், 7,346 மாணவிகள் என மொத்தம் 14,022 பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்வில் 5,429 மாணவர்கள், 6,767 மாணவிகள் என 12,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசு வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம், 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் 33வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 0.31 சதவீதம் குறைந்து உள்ளது. அரசு பள்ளிகளை பொருத்தவரையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,210 மாணவர்களும், 4,606 மாணவிகளும் என மொத்தம் 7,816 பேர் தேர்வு எழுதிய நிலையில் 2,315 மாணவர்களும், 4,062 மாணவிகளும் என மொத்தம் 6,377 பேர் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 81.59 சதவிகிதமாக உள்ளது.

செங்கல்பட்டில் 90.85 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 90.85 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,203 மாணவர்களும் 14,903 மாணவிகளும் என மொத்தம் 28,106 பேர் எழுதினர். இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் 11,504 மாணவர்களும், 14,030 மாணவிகளும் என மொத்தம் 25,534 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்படி, 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் 22வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.86 சதவீதமாகும். இதில், இரும்பேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, சட்டமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12,196 மாணவர்கள் தேர்ச்சி: 33வது இடத்தை பிடித்தது appeared first on Dinakaran.

Related Stories: