ஊட்டியில் தொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்குமா?

ஊட்டி, மே 14: நீலகிரி மாவட்டத்தில் பசுமை வீரர்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், மற்ற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இவைகளின் பயன்பாடு இருந்த நிலையில், தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்குள்ளும் மறைமுகமாக புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து மறை முகமாக சிலர் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து, இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வரியத்தின் சார்பில் பசுமை வீரர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொண்டனர். முன்னதாக இந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பிரச்சாரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடுதல் கலெக்டர் கௌசிக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருளான மஞ்சப்பை ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அறிகுறிகள்

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். மேலும், ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் ஏற்படும். அதன்படி, வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின் மூளை காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உடையவர்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

The post ஊட்டியில் தொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: