மூஸா ரஸா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் இந்திய குடிமைப் பணி அதிகாரியும், சமூகச் செயல்பாட்டாளரும், நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தென்னிந்திய கல்வி அறக்கட்டளை (எஸ்ஐஇடி) தலைவருமான மூஸா ரஸா மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ப்பணிப்பும், அயரா உழைப்பும், தொண்டுள்ளமும் கொண்ட மூஸா ரஸாவின் மறைவு அவர் பங்களித்து வந்த அனைத்துத் துறைகளுக்கும் பேரிழப்பு. பாஜ முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மூஸா ரஸா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: