அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி, மே 9: திருச்சியில் அரசு போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தின் சார்பில், அதன் தலைமை அலுவலகம் அருகே துவங்கப்பட்ட கோடைகால நீர்மோர் பந்தலை, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொமுச குணசேகரன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, மோகன்தாஸ், கமல், முஸ்தபா, பவுல்ராஜ், கிராபட்டி செல்வம், ராமதாஸ், ராமு சிந்தை பாலமுருகன், திருப்பதி மற்றும் தொமுச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: