வாகன ஓட்டிகள் கடும் அவதி ஜீயபுரம் அடுத்த எட்டரையில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

 

ஜீயபுரம், மே 29: திருச்சி அருகேயுள்ள எட்டரை  மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 19ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் காப்புகட்டுதலும் நடந்தது. கடந்த 24ம் தேதி முதல் மயில், காமதேனு, ரிஷப வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் காலையில் உய்யக்கொண்டான் படித்துறையில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து கிடாவெட்டுதல், குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அங்குள்ள அன்னதான மண்டபத்திற்கு சென்று அருள்பாலித்தார். மாலை 5.30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி மேள, தாளம், வாண வேடிக்கை முழங்க தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நிலைக்கு நின்றதும் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்தனர். இரவு மாபெரும் வாணவேடிக்கை நடந்தது. நாளை முத்துப் பல்லக்கில் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காரியக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post வாகன ஓட்டிகள் கடும் அவதி ஜீயபுரம் அடுத்த எட்டரையில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: