ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை

திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் திலகர் (24). ஆக்டிங் டிரைவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கரூர் திருமகூடனுர் சேர்ந்த இளங்கோ மகள் நேஜா (23) என்பவரை காதலித்து ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் நேஜா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். பலமுறை அழைத்தும் மனைவி வராததால் திலகர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, திலகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரியமங்கல போலீசார், உயிரிழந்த திலகரின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஊர்க்காவல் படை ஊழியர் தூக்குமாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: