கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை உடனே நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: கர்நாடக பாஜவின் டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய அனிமேஷன் காட்சி வௌியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களை விட முஸ்லிம்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு தருவது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி இந்த அனிமேஷனை வௌியிட்ட பாஜ மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி கடந்த 5ம் தேதி ஆட்சேபனைக்குரிய பதிவை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்த பதிவு இன்னும் நீக்கப்படவில்லை. இதையடுத்து சர்ச்சைக்குரிய பதிவை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை உடனே நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: