விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ்2 தேர்வில் சாதனை

தர்மபுரி, மே 7: தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் மனோஜ் கார்த்தி 592 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவர் தருண் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2ம் இடம், விஜய் கணேஷ் 590 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளனர். மாணவன் கவின் 4 பாடங்களிலும், 5 மாணவர்கள் 3 பாடப்பிரிவுகளிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தருண் பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முக்கிய பாடங்களில் 139பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பள்ளிகளில் கணினி அறிவியலில் 52 பேரும், கணிதத்தில் 22 பேரும், இயற்பியலில் 9 பேரும், வேதியியலில் 7 பேரும், உயிரியலில் 4 பேரும், வணிகவியலில் 19 பேரும், பொருளியலில் 8 பேரும், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடு, வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா 7 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 490 ஆகும். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை  விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணை தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் சரவந்தி தீபக், டாக்டர் திவ்யா ராம்குமார், முதல்வர்கள் கௌசல்யா, வள்ளியம்மை மற்றும் ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி பிளஸ்2 தேர்வில் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: