தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 31 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கோயம்பேடு பகுதியில் துர்கேஷ் என்பவரை கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய அஸ்வின்குமார் (25), புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நூம்பல் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அசோக்குமார் (23), மதுரவாயல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியை ேசர்ந்த சுந்தர் (35), கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத் (27), டி.பி.சந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த தண்டலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), பிரசாந்த் (25), இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அயனாவரத்தை சேர்ந்த குமார் (42),

வழிப்பறியில் ஈடுபட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த முனிஷ் (எ) கல்சா (22), முகம்மது உசேன் (21), தரமணி பகுதியில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (எ) சேதுபதிபாண்டியன் (35), எம்ஜிஆர் நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சுரேஷ்குமார் (27), பெரியமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த அப்பு (எ) உதயா (24), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோஷ்வா (எ) லாரன்ஸ் (24), தலைமை செயலகம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் (23), கோபி (46) என பல்வேறு வழக்கில் தொடர்புடைய 31 பேரை போலீசார் பரிந்துரைப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 31 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: