அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருவள்ளூர்: அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா ஏற்பாட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன் ஏற்பாட்டில் அரசு மருத்துவமனை எதிரிலும், அண்ணாதுரை ஏற்பாட்டில் ஐஆர்என் திருமண மண்டபம் அருகிலும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு நகர செயலாளர் ஜி.கந்தசாமி, பி.வி.பாலாஜி, நகராட்சி கவுன்சிலர் எல்.செந்தில்குமார், சந்திரசேகர், வி.ஆர்.குமரேசன், வெற்றி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கி நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், ரோஸ் மில்க், ரஸ்னா, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, கிருணிபழம் ஆகியவற்றை வழங்கினார். இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைத் தலைவர் ச.ஞானகுமார், சீனிவாசன், வள்ளியம்மாபேட்டை சீனு, ராமதாஸ், ச.நிரஞ்சன் சம்பத்குமார், ஏ.மஞ்சுளா, எஸ்.மஞ்சுளா, ஆனந்தன், குட்டியம்மாள், கலைவாணி, சதீஷ், தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: