விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!

டெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக, நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறி இருப்பதால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்படுவதாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 223 ஊழியர்கள் இத்தனை வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில், ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்படவில்லை. முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால் எந்தவொரு கேள்வியும் இன்றி நியமனம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்வாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மீ கட்சியின் எம்.பி-யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: