ரோஜா பூங்கா சாலையில் மரக்கிளைகள் அகற்றம்

 

ஊட்டி, மே 1: ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு வளர்ந்துள்ள பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

தற்போது, ேகாடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இப்பூங்காவிற்கு செல்கின்றனர்.  இந்நிலையில், பூங்காவிற்கு செல்லும் சாலையோரங்களில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் முதல் பூங்கா நுழைவு வாயில் பகுதி வரை சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. இவைகளில் பெரும்பாலான மரங்களில் உள்ள கிளைகள் பூங்காவிற்கு செல்லும் சாலையில் தொங்கிக் கொண்டிருந்தன.

இதனால், பெரிய அளவிலான சுற்றுலா பஸ் மற்றும் வேன்கள் செல்லும் போது இடையூறாக இருந்தது. மேலும், மழைக்காலங்களில் சாலையின் குறுக்கே விழும் அபாயம் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது இச்சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post ரோஜா பூங்கா சாலையில் மரக்கிளைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: