குப்பைகளை அள்ளாததால் சுகாதார சீர்கேடு

 

ஊட்டி, மே 22: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி 36 வார்டுகளுக்கு உட்பட பகுதிகளில் நகராட்சி மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான வார்டு பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஊட்டி ஏடிசி பகுதி மருத்துவமனை அருகேயுள்ள பகுதிகள், சேரிங்கிராஸ் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி வைக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வரும் நிலையில், குப்பைகளை முறையாக அகற்றப்படாததால், சுற்றுலா பயணிகள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நகரில் தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post குப்பைகளை அள்ளாததால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: