குன்னூரில் இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூத்துள்ளது

 

ஊட்டி, மே 21: இரவில் மட்டும் பூக்கக்கூடிய பிரம்ம கமலம் பூ குன்னூரில் பூத்துள்ளது. பிரம்ம கமலம் எனப்படும் அரிய வகை மலர் செடிகள் கள்ளி இனத்தை சேர்ந்தது. இந்த செடிகளில் இலையின் பக்கவாட்டில் கணுக்கள் உருவாகும். அவற்றில், இருந்து இந்த செடிகளில் மலர்கள் பூக்கும். இந்த செடிகளில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலர்கள் பூக்கும்.

இந்த மலர்கள் இரவு நேரத்தில் பூத்து குலுங்கும். இரவு 10 மணிக்கு மேல் பூக்கும் இந்த மலர்கள் மீண்டும் அதிகாலையில் வாடிவிடும். தற்போது, இந்த மலர்கள் குன்னூரில் உள்ள ஹேர்வுட் காட்டேஜ் பகுதியில் உள்ள ராஜலட்சுமி என்பவர் வீட்டில் பூத்துள்ளது. அரிய வகை மற்றும் தெய்வீக தன்மையும் வாய்ந்த இந்த மலர்களை கொண்டு சிவபெருமானை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில், இந்த அரிய வகை மலர்களை பலரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post குன்னூரில் இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூத்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: