மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக 8 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் விடுதலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ந்தது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரையை சேர்ந்த மகாதேவன் மற்றும் தேனியை சேர்ந்த ரீனா ஜாய்ஸ்மேரி ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாவட்ட நீதிபதி செம்மல் விசாரணை செய்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் சேர்ந்த மகாதேவன் மற்றும் ரீனா ஜாய்ஸ்மேரி ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்து செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் உரிய முகாந்திரம் இல்லாததால் ஏழரை ஆண்டுகளாக தேவையில்லாமல் சிறையில் அடைத்துள்ளனர் என கூறி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாதேவன் மற்றும் ரீனா ஜாய்ஸ்மேரி ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும் அப்பாவிகள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் சிறையில் இருந்தது சகித்து கொள்ள முடியவில்லை எனவும், நீதிபதி கருத்து தெரிவித்தார்.

The post மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக 8 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் விடுதலை appeared first on Dinakaran.

Related Stories: