கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பேரூராட்சி உதவி இயக்குனர் வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் குறிப்பாக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் தபால்தெரு, மேட்டு தெரு, கோட்டக்கரை, காட்டுக்கொள்ளை தெரு, விவேகானந்தர் நகர், மா.பொ.சி. நகர், ஏனாதிமேல்பாக்கம், மாதர்பாக்கம், ரெட்டம்பேடு, குருவிஅகரம், தேவம்பேடு, சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, மங்காவரம், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, மாநெல்லூர், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், எகுமதுரை, கண்ணன்பாக்கம், எருக்குவாய், புதுவாயில், புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, அயநெல்லூர், அய்யர் கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதியினர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையம், காவல் நிலையம், துணிக்கடை, செல்போன் கடை, மளிகைக் கடைகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாட்களுக்கு முன்பாகவே ரெட்டம்பேடு சாலை, ஜிஎன்டி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் போடப்பட்டு, செயல் அலுவலர் பாஸ்கர், பேரூராட்சித் தலைவர் சகிலா அறிவழகன் ஏற்பாட்டில் தினந்தோறும் பகல் முழுவதும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வெயிலின் வெப்பம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் ஜெயகுமார் நேற்று கும்மிடிப்பூண்டி ஜிஎன்ட்டி சாலையில் உள்ள தண்ணீர் பந்தலில் ஏழை எளிய மக்களுக்கு மோர் மற்றும் ஓஆர்எஸ் பானத்தை வழங்கினார். இதில் பேரூராட்சி அலுவலர்கள் ரவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வெயிலில் தாகத்தை தீர்க்க மோர் கொடுத்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஓஆர்எஸ் கரைசல் விநியோகம்: பேரூராட்சி உதவி இயக்குனர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: