வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி : விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி

லக்னோ :மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புது டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஜந்தர் மந்திரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது டெல்லி போலீஸாருக்கும் விவசாயிகளுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்துக்கு அனுமதிக்காத காவல்துறையை எதிர்த்து மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே, வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாய போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில்,”வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111பேர் போட்டியிட உள்ளோம். பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 1,000 விவசாயிகள் போட்டியிடுகின்றன,”இவ்வாறு தெரிவித்தார். 2014 மற்றும் 2019ல் பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஜூன் 1ம் தேதி 7 கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி : விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: