10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: பெரம்பலூர் மாவட்டம் 94.77% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பெரம்பலூர்,மே11: எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் பெரம்பலூர் மாவட்டம் 94.77 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநிலத்தில் முதல் இடத்திலிருந்து 8வது இடத்திற்கு சென்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 141 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,289 மாணவர்களும், 3,576 மாணவிகளும் என மொத்தம் 7,865 மாணவ, மாணவிகள் 42 தேர்வு மையங்களில் எழுதினர். இதில் 3,985 மாணவர்களும் 3,469 மாணவிகளும் என மொத்தம் 7,454 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.77 ஆகும். இதில் மாணவர்கள் 92.91 சதவீதமும், மாணவிகள் 97.01சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 04.01சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியைப் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு பெரம்பலூர் மாவட்ட தேர்ச்சி சதவீதம் பின்னடைவு ஏற்பட்டு, மாநில அளவில் 8ம் இடத்தைப் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், ஆதி திராவிட நலப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி கள், தனியார் மற்றும் சுய நிதி பள்ளிகள் மற்றும் சமூக நலப்பள்ளி என மொத்தம் உள்ள 141 பள்ளி களில் 60 பள்ளிகள் 100சத வீதத் தேர்ச்சியைப் பெற் றுள்ளது. இதில் ஆதி திராவிட நலப்பள்ளிகளான லாடபுரம், களரம்பட்டி, பசும்பலூர், பாடாலூர் பள்ளிகள், அரசு பள்ளிகளான நெற்குணம், வாலிகண்டபுரம், வெங்கலம், கல்பாடி, மேட்டுப்பாளையம்,செங்குணம், தம்பிரான்பட்டி, அரசு மலை வாழ் உண்டு உறைவிடப்பள்ளியான மலையாளப்பட்டி, கூத்தூர், லெப்பைக் குடிக்காடு, மருவத்தூர், மாதிரிப்பள்ளி கிழுமத்தூர், ஒதியம், ஜமீன் பேரையூர், காருகுடி, ஆதனூர், எழுமூர், கூடலூர், ஜமீன் ஆத்தூர், பீல்வாடி, புதுவேட்டக்குடி, கொட்டரை, அரசு உதவி பெறும் பள்ளிகளான தந்தை ரோவர் மற்றும் மௌலானா பள்ளி, சுய நிதி மெட்ரிக் பள்ளிகளில் 23பள்ளிகள், சுயநிதிப் பள் ளிகளில் 7பள்ளிகள் மற்றும் சமூக நலப்பள்ளியான பெரம்பலூர் கவுதம புத்தர் பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

137 மாணவர்கள் 100 சதவீதத் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் படத்தில் ஒருவரும், கணிதப் படத்தில் 53 மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில் 81 மாணவ, மாணவியரும், சமூகஅறிவியல் பாடத்தில் 2 மாணவ மாணவியரும், என மொத்தம் 137 பேர்கள் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 9 ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 95.95 சதவீதத் தேர்ச்சியையும், 82 அரசு பள்ளிகள் 91.58 சதவீதத் தேர்ச்சியையும், 7 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் 98. 80 சதவீதத் தேர்ச்சியையும், 29 சுயநிதி மெட்ரிக் பள்ளி கள் 99.19 சதவீதத் தேர்ச்சி யையும், 13 சுயநிதி தனி யார் பள்ளிகள் 98.75 சதவீத தேர்ச்சியையும், 1 சமூகநல பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி யையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: பெரம்பலூர் மாவட்டம் 94.77% மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: