அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு: 97.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி

அரியலூர், மே11: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நடந்து முடிந்த மார்ச் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 172 பள்ளிகளைச் சேர்ந்த 9,565 மாணவ மற்றும் மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4902 மாணவர்களும், 4663 மாணவிகளும் தேர்வு எழுதினர். 116 அரசு பள்ளிகளில் 2959 மாணவர்களும், 2655 மாணவிகளும் ஆக மொத்தம் 5614 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2813 மாணவர்களும், 2585 மாணவிகளும் ஆக மொத்தம் 5400 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 96.19ஆகும்.15 அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 899 மாணவர்களும், 1261 மாணவிகளும் ஆக மொத்தம் 2160 பேர் தேர்வு எழுதினர். இதில் 874 மாணவர்களும், 1252 மாணவிகளும் ஆக மொத்தம் 2126 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 99.29 ஆகும்.

3 அரசு ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 21 மாணவர்களும், 23 மாணவிகளும் ஆக மொத்தம் 44 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 மாணவர்களும், 23 மாணவிகளும் ஆக மொத்தம் 43 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.73 ஆகும்.23 மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 815 மாணவர்களும், 596 மாணவிகளும் ஆக மொத்தம் 1411 பேர் தேர்வு எழுதினர். இதில் 811 மாணவர்களும், 592 மாணவிகளும் ஆக மொத்தம் 1403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.43 ஆகும்.15 சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 208 மாணவர்களும், 128 மாணவிகளும் ஆக மொத்தம் 336 பேர் தேர்வு எழுதினர். இதில் 208 மாணவர்களும், 128 மாணவிகளும் ஆக மொத்தம் 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 1 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.31 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 52, ஆதி திராவிடர் நலப்பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளி 9, மெட்ரிக் பள்ளி 18, சுயநிதி பள்ளி 14 ஆக மொத்தம் 94 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் முதல் இடம் பெற்றதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, பொன்னாடை போu;j; வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு: 97.31 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: