₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், ஏப்.27: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மொத்தம் 120 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ₹74.90 முதல் ₹95.10 வரையும், 2ம் தரம் ₹65.90 முதல் ₹73.10 வரை என மொத்தம் ₹5 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், வருகிற மே 3ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: