2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா

சென்னை: சிறுபான்மையினர் தொடர்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஷம கருத்துகளை வேண்டும் என்றே பிரதமர் மோடி பேசியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ச்பாராவில் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய பேச்சு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டி.ராஜா தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்து ஆதாரமற்றது என்றும் மோடியின் பேச்சு இழிவான செயல் என்றும் கட்டமாக விமர்சித்துள்ளார். இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் நோக்கில் திட்டமிட்டு பேசிய பிரதமர் மோடியின் செயல் கிரிமினல் குற்றம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மோடி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராஜா அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

The post 2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: