கடலூர் மாவட்டத்தில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘‘கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post கடலூர் மாவட்டத்தில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: