இதில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசு கல்லூரிகளில் 54 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது முறையாக 3வது இடத்தை பெற்று இருக்கிறது. மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி, வேலூர் முத்துரங்கன் அரசு கலைக் கல்லூரி ஆகியவையும் இடம் பெற்றிருக்கிறது. இதேபோல், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் பட்டியலில் தமிழ் நாட்டில் இருந்து 61 கல்லூரிகளும், தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகள் பட்டியலில் 8 கல்லூரிகளும் இடம் பெற்று உள்ளன. இதுதவிர, 34 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
The post சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம் appeared first on Dinakaran.