கரூர், டிச. 12: கரூர் வெங்கமேடு காட்டுப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அடுத்துள்ள என்எஸ்கே நகர் பகுதியை ஒட்டியுள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு போட்டு தொங்குவதாக இந்த பகுதி விஏஒ வெங்கமேடு காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
