தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர், ஏப்.21: தேக்கடியில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. குமுளி ஊராட்சி, தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் மற்றும் மண்ணாரத்தரையில் கார்டன் ஆகியவை இணைந்து நடத்தும் தேக்கடி 16மற்றும்வது மலர் கண்காட்சி, கடந்த மார்ச் 27 முதல் தேக்கடி-குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு பொழுதுபேக்கு நிகழ்வுகளோடு இயற்கை உணவு, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு என நாள்தோறும் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு கருத்தரங்கில், போதை விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேக்கடி சைக்கிள் கிளப் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண் தோட்டக்கலை சங்க தலைவர் தாமஸ் வரவேற்றார். மன்னார்தரை ஷாஜி, ரெஜி, புஷ்கரன், பொறுப்பாளர் ஜோசப் ஜே.கரூர் வாழ்த்திப் பேசினார்.

உதவி கலால் ஆய்வாளர் சதீஷ்குமார் சுகாதார பாதுகாப்பு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பீர்மேடு எம்எல்ஏ வாழூர்சோமன் கலந்து கொண்டார். ஜோசப், எபின்ஜோஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜேஷ் நன்றி கூறினார்.

The post தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: