கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்..!!

கோவை: கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.

ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா – ஆணையத்தில் புகார்

கோவையில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்தது. பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களை செல்போனில் அழைத்து வாக்கு சேகரிப்பதாக புகார் எழுந்தது. வாக்காளர்களை அலைபேசி மூலம் அழைத்து வாக்குகளை கேட்டு ஜிபே மூலம் பணம் கொடுக்கின்றனர். கோவை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் புகார் அளித்துள்ளார்.

கோவை தொகுதியில் ஜிபே மூலம் அண்ணாமலை பணப்பட்டுவாடா

தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு, ஜிபே மூலம் அண்ணாமலையே வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை என திமுக தெரிவித்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி ஜிபே மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஜெய்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த அண்ணாமலையின் மைத்துனர் சிவக்குமார் ஆகியோர் பணப்பட்டுவாடாயில் ஈடுபட்டனர்.

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

ஜிபே மூலம் பணப்பட்டுவாடா செய்யும் பாஜகவினர் மற்றும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது. ஆன்லைனில் பணம் தருவோர் மீதும் வழிநடத்தும் பாஜக வேட்பாளர் மீதும் நடவடிக்கை தேவை.

 

The post கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: