கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்

தஞ்சாவூர், ஏப்.16:தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று துவங்கியது.
மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் கடந்த 6 ஆண்டுக்கு முன்வரை ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதித்து வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்து நடைமுறைபடுத்தி வருகிறது. வழக்கம் போல் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி தடைக்காலம் நேற்று தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 147 விசைப்படகுகளும், 4500 நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் விசைப்படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தியுள்ளனர். மீனவர்கள், மீன் பிடி தொழிலாளர்கள், மீன்வியாபாரிகள், துறைமுகங்களில் கடை வைத்து தொழில் நடத்துபவர்கள், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மேலும், மீன்பிடித் தடைக்காலத்தில் தங்கள் படகுகளை கரைக்கு ஏற்றி மராமத்து செய்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர் என்பது குறிப்பிட தக்கது.

The post கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: