நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு வலை இறக்குமதியை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் கரூரில் பாரம்பரிய தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

கரூர், ஏப். 14: ஒன்றிய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கொசு வலையை நிறுத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய கொசு விலை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாவது, கரூரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கொசுவலை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு கொசு வலையை அதிக விலை கொடுத்து பங்களாதேஷ், சீனா, தைவான் ஆகிய நாடுகளில் இறக்குமதி செய்கிறது.

இதனால் கரூரில் உற்பத்தியாகும் கொசுவலைகளை பீஹார், அசாம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாமல் தொழில் முடங்கியது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர்களிடம் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததின் அடிப்படையில் ஏற்றுமதி, இறக்குமதி துறையின் ஆணைப்படி இறக்குமதி செய்ய செப்டம்பர் மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொசுவலை தொழில் புத்துணர்வு பெறுவதோடு கொசுவலை தொழிலதிபர்கள், உள்ளூர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நேரிடையாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். மேலும் இந்த ஆனையை நிரந்தரமாக்கி நிரந்தர தீர்வு ஏற்படுத்தி நிரந்தர தீர்வாக இருக்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு வலை இறக்குமதியை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் கரூரில் பாரம்பரிய தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: